நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - விரைந்து வந்து  போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர்!
வேலூர், 18 மார்ச் (ஹி.ச.) வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் தமீம் அன்சாரி (33) என்பவர் தனது மனைவியுடன் சாப்பிடுவதற்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே சென்றுள்ளார். அப்போது காமராஜர் சில
தீ


வேலூர், 18 மார்ச் (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் தமீம் அன்சாரி (33) என்பவர் தனது மனைவியுடன்

சாப்பிடுவதற்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே சென்றுள்ளார்.

அப்போது காமராஜர் சிலை அருகே கார் கடக்கும் போது காரின் முன் பகுதியில் புகை எழுந்து

திடீரென காரின் முன் பகுதி தீ பிடித்து எரிந்துள்ளது.

இதனால் காரில் இருந்த தமீம் அன்சாரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் காரை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு இறங்கி தப்பித்தனர்.

இதுகுறித்து வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ

இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக

போராடி தீயை அணைத்து காரை நடு ஈரோட்டிலிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் இந்த தீ விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam