பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை, 18 மார்ச் (ஹி.ச) விருதுநகர் ரயில்வே யார்டு பகுதியில் இன்று (மார்ச் 18) காலை 10:50 மணி முதல் மாலை 4:50 மணி வரை அவசரப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்
Changes in Palakkad–Tiruchendur Train Service


சென்னை, 18 மார்ச் (ஹி.ச)

விருதுநகர் ரயில்வே யார்டு பகுதியில் இன்று (மார்ச் 18) காலை 10:50 மணி முதல் மாலை 4:50 மணி வரை அவசரப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பாலக்காடு சந்திப்பில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று வழக்கமான பாதைக்கு மாற்றாக மதுரை சந்திப்பு, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படும்.

இந்த மாற்றுப்பாதை இயக்கத்தின் போது திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது. அதற்குப் பதிலாக, மதுரை கிழக்கு மற்றும் மானாமதுரை ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இந்தச் சேவை மாற்றத்தைக் கவனித்துத் தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b