Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத் துறை, தமிழக டிஜிபி-க்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக எம். பி. இன்பதுரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அமலாக்க துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், இன்று வழக்கு பட்டியலிடப்படவில்லை தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.
இதனை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam