நடிகை நயன்தாரா குறித்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இழிவான பேச்சு - திரையுலகம் சார்பில் நடிகர் சரத்குமார் கண்டனம்
சென்னை, 18 மார்ச் (ஹி.ச) தமிழக அரசை கண்டித்து நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நடிகை நயன்தாரா குறித்து இழிவாக பேசியதற்கு நடிகரும் பாஜக நிர்வாகிகளமான சரத்குமார் எக்ஸ் தள
Sarathkumar


Hs


சென்னை, 18 மார்ச் (ஹி.ச)

தமிழக அரசை கண்டித்து நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நடிகை நயன்தாரா குறித்து இழிவாக பேசியதற்கு நடிகரும் பாஜக நிர்வாகிகளமான சரத்குமார் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து, விழுப்புரம் நகராட்சி திடலில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில், சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியது கண்டனத்திற்குரியது.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் குறித்து பேசும் போது, பெண்களை இழிவுபடுத்தி பேசுவது தவறு, அதிலும் முக்கியமாக வாழ்க்கையில் சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கி வெற்றி பெற்று கலையுலகத்தில் இருக்கும் பெண்களை எளிதில் உதாரணம் காட்டி இழிவுபடுத்துவது, அனைவருக்கும் வாடிக்கையாக போய்விட்டது. இதனை திரையுலகம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இச்சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும், இனி வருங்காலங்களில் இதுபோன்று யாரும் பேசாமலிருப்பது நல்லது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு என்ற வள்ளுவன் சொல் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ