Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 18 மார்ச் (ஹி.ச.)
ஈரான் அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து கடந்த 28ஆம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கின. இதில் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது.
போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடியதால், கப்பல் போக்குவரத்தை சரிசெய்ய போர் கப்பல்களை அனுப்பும்படி அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார். ஏழு நாடுகளிடம் உதவி கேட்டதாக அவர் சொன்னாலும், எந்தெந்த நாடுகள் என்று அவர் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிடம் ஏற்கனவே அவர் உதவி கேட்டு இருந்தார். ஆனால் ஹார்முஸ் ஜலசந்திக்கு கப்பல் அனுப்ப பல நாடுகள் மறுத்துவிட்டன.
அந்த வகையில் இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகள் அடுத்தடுத்து மறுப்பு தெரிவித்து உள்ளன. இது டொனால்ட் டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவுக்கு உதவாத நாடுகளை மறக்கமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
அவர்கள் பாதுகாப்புக்காக அமெரிக்கா பல கோடி டாலர்களை செலவு செய்தும், அமெரிக்காவுக்கு உதவி தேவைப்படும்போது அந்த நாடுகள் ஒதுங்கிக் கொள்வதே வழக்கம் என்று டிரம்ப் குறை கூறியுள்ளார்.
அமெரிக்கா ஏற்கனவே ராணுவ ரீதியாக பெரிய வெற்றியை பெற்றுவிட்டதால், இனிமேல் நேட்டோ நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா போன்ற நாடுகளின் உதவி தேவையில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM