கோவை மாவட்ட காவல்துறையினர் அதிரடி - தேர்தல் முன்னெச்சரிக்கையாக 32 ரவுடிகள் கைது!
கோவை, 18 மார்ச் (ஹி.ச.) கோவை மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 32 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கா
Covai Police


கோவை, 18 மார்ச் (ஹி.ச.)

கோவை மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 32 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன் தலைமையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தல் காலத்தை முன்னிட்டு குற்றச்செயல்கள் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில், முந்தைய வழக்குகள் உள்ளவர்கள் மற்றும் பழங்குற்றவாளிகள் மீது சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனைகளின் போது தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 32 பேரை காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தேவையான தகவல்களை பெற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் அமைதியை குலைக்கும் எந்தவொரு செயல்களுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிரடி நடவடிக்கை கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN