Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மார்ச் (ஹி.ச)
நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று மாமல்லபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக விஜய் இன்று முழுவதும் நோன்பு வைத்து, மாலை இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டு நோன்பை திறக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மாலை 6 மணிக்கு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு அக்கட்சி தலைமை வெளியிட்ட அறிக்கையில், அழைப்பிதழ் வழங்கப்பட்ட 1,000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அழைப்பிதழ் இல்லாதோருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.
தவெகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு முதல்கட்ட நேர்காணல் கடந்த மார்ச் 10 ஆம் தேதி பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் விஜய் கலந்து கொண்டு நேர்காணல் செய்தார்.
புதுச்சேரி வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று முன் தினமும், தவெக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் நேர்காணல் பனையூரில் நேற்றும் நடைபெற்றது.
இதில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b