Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 மார்ச் (ஹி.ச.)
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ராஜ்யசபா துணைத் தலைவராக உள்ள மூத்த எம்பி ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின்பதவி காலம் நிறைவடைவதை தொடர்ந்து அவருக்கான பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிழழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு மூத்த எம்பிக்கள் உரையாற்றினர்.
அவையில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
நாடாளுமன்ற அவையின் நடைமுறை விதிகள் மற்றும் அலுவல் நடத்தை விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும். முக்கியத்தும் வாய்ந்த விவகாரங்கள், பிரச்னைகள் அவையில் விவாதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற அவையின் அமர்வுகள் அதிக நாட்கள் நடைபெற வேண்டும். சட்டங்களை இயற்றுவதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும்.
அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் பொதுவாழ்விலிருந்து ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை; தேசத்திற்குச் சேவையாற்றுவதில் அவர்களுக்குள்ள ஆர்வம் ஒருபோதும் தளர்வடைவதுமில்லை.
அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு எம்பிக்களும் தங்கள் கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்குகிறது. பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்னைகள் குறித்து அவையில் நிச்சயமாக விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். ஏழைகள், சமூகத்தின் விளிம்புநிலை மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பான பிரச்னைகளைப் விவாதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
பெரும்பாலும், நாங்கள் இப்பிரச்னைகளை எழுப்பும்போது. ஆளும் கட்சியினர் அதை ஒரு விமர்சனமாகவே கருதி, முழுமையாகக் காதுகொடுத்துக் கேட்காமலேயே மறுக்கத் தொடங்குகின்றனர்.
மக்களின் பிரச்னைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கார்கே பேசினார். கார்கே தற்போது ஓய்வுபெற்றாலும், அவர் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b