திருச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் சிறுவன் பலி - நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை, 18 மார்ச் (ஹி.ச.) திருச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் பலியான நிகழ்வை கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில
Nainar


Sh


சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)

திருச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் பலியான நிகழ்வை கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

திருச்சி மாவட்டம் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், நான்கரை வயது சிறுவன் பலியாகியதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு என்று ஐந்தாண்டுகளாக வெற்றுப் பெருமை பேசிவிட்டு, போதிய மருத்துவர்களைக்கூட திமுக அரசு நியமிக்கவே இல்லை என்பதன் சாட்சியே இக்கொடூர சம்பவம். ஆளும் அரசின் நிர்வாகத் திறனின்மையால் வாழ வேண்டிய அப்பாவிக் குழந்தையின் ஆயுள் பறிக்கப்படுவது இனி என்றும் நேரக் கூடாது

மருத்துவத் துறையைச் சீரழித்து மக்கள் உயிரோடு விளையாடிய திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைப்போம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ