ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி பிரியாவிடை
புதுடெல்லி, 18 மார்ச் (ஹி.ச.) தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில் ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி பிரியாவிடை அளித்தார். ராஜ்
Prime Minister Modi Bids Farewell to Retiring MPs


புதுடெல்லி, 18 மார்ச் (ஹி.ச.)

தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

பிரதமர் மோடி தனது உரையில் ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி பிரியாவிடை அளித்தார்.

ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

அவையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெறுகிறது. அவற்றில் ஒவ்வொரு எம்பிக்களும் தனித்துவமான பங்கு உண்டு.

தங்களது பதவிக்காலத்தை நிறைவு செய்து அவையை விட்டு வெளியேறும் எம்பிக்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஓய்வு பெறும் எம்பிக்களின் அனுபவம் பொது வாழ்க்கைக்கு தொடர்ந்து வழிகாட்டும்.

அரசியல் பயணம் என்பது என்றும் தொடரக்கூடியது. அதற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாதுதேவ கவுடா, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை பார்லிமென்ட் சேவைக்காக அர்ப்பணித்துள்ளனர். அனைத்து புதிய பார்லிமென்ட் எம்பிக்களும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

அர்ப்பணிப்புடன் அவைக்கு வந்து, சமூகத்தின் மீதான பொறுப்புகளை நிறைவேற்றுவது ஆகியவை மூத்த எம்பிக்களின் குணங்களாகும்.

அவர்களின் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன். ராஜ்யாசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், அவை நடவடிக்கைகளை அமைதியாகவும், பாரபட்சமின்றியும் நடத்தி உள்ளார்.

ஹரிவன்ஷ் நீண்ட காலமாக அவையில் பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பைப் பெற்றார். அவர் எழுதுவதில் திறமையானவர் மட்டுமல்ல, கடின உழைப்பாளியும் கூட அவர் நாடு முழுவதும் பயணம் செய்து தனது கடமைகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றியுள்ளார்.

பார்லிமென்டின் கண்ணியத்தைக் காக்குமாறும், அனுபவம் வாய்ந்த எம்பிக்களிடம் உத்வேகம் பெறுமாறும் புதிய எம்பிக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஜனநாயக மரபுகளை வலுப்படுத்துவதற்கு அவர்களின் வழிகாட்டுதல் இன்றியமையாதது.

ஒரு காலத்தில் இந்த அவை அதன் கலகலப்பான நகைச்சுவை மற்றும் நையாண்டிக்குப் பெயர் பெற்றிருந்தது.

ஆனால் தற்போது அத்தகைய தருணங்கள் குறைந்து வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Hindusthan Samachar / vidya.b