பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல்
ராமநாதபுரம், 18 மார்ச் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரமானது தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என்ற மூன்று பெருமைகளையும் கொண்டு காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. இங்கு மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தங்களுடன் வாழ்ந்து ம
Rameshwaram Temple


ராமநாதபுரம், 18 மார்ச் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரமானது தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என்ற மூன்று பெருமைகளையும் கொண்டு காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகவும் இருந்து வருகிறது.

இங்கு மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தம் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகும்.

இந்தநிலையில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அக்னி தீர்த்தம் கடற்கரையில் குவிந்தனர்.

புரோகிதர்கள் மூலம் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி, தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தம் கடலில் கரைத்து புனித நீராடினார்.

இதன்பின் ராமநாதசுவாமி கோவிலுக்கு உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி, ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்மனை வணங்கி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN