ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
காஞ்சிபுரம், 18 மார்ச் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் பணம் நகை மற்றும் பரிசு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பதை தீவிரமாக கண்காணிக்க பறக்
தேர்தல் பறக்கும் படை


காஞ்சிபுரம், 18 மார்ச் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பறக்கும் படையினர்

தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனங்களில் பணம் நகை மற்றும் பரிசு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பதை தீவிரமாக கண்காணிக்க பறக்கும் படையினர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஆங்காங்கே சோதனை செய்து வருகின்ற நிலையில், இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட் சந்திப்பில் முடிச்சூரிலிருந்து சுங்குவார்சத்திரம், நோக்கி சென்ற காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

சோதனையின் போது அந்த காரில் 15 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

15 கிலோ கஞ்சாவையும் காரையும் பறிமுதல் செய்து காரில் வந்த இரண்டு வட மாநில வாலிபர்களையும் கைது செய்து திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சந்திப்பில் காரில் பதினைந்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam