Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)
சந்தை கடந்த வாரம் பெரிய அளவில் சரிந்த பிறகு, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்த சமயத்தில், ஜேஎம் ஃபைனான்சியல் இன்ஸ்டிடியூஷனல் செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம், சில பங்குகள் இன்னும் நல்ல வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
பாலிகேப் இந்தியா:
பாலிகேப் இந்தியா நிறுவன பங்குகளை வாங்கலாம் என ஜேஎம் ஃபைனான்ஷியல் பரிந்துரை செய்துள்ளது. இலக்கு விலை ரூ.9,000 ஆக நிர்ணயித்துள்ளது, இது இப்போது இருக்கும் விலையில் இருந்து சுமார் 25.1% வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
புவிசார் அரசியல் காரணங்களாலும், விலைவாசி உயர்வு காரணமாகவும் மார்ச் மாதத்தில் கொஞ்சம் குறைவாகவே லாபம் இருக்கும் என அந்த தரகு நிறுவனம் கணித்துள்ளது. ஆனாலும், வரும் ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு, மின்சாரம் மற்றும் தொழிற்சாலை வளர்ச்சி போன்ற காரணங்களால் நல்ல தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடர்னல்:
எடர்னல் பங்குகளை வாங்கலாம் என ஜேஎம் ஃபைனான்ஷியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இலக்கு விலை ரூ.400 ஆக நிர்ணயித்துள்ளது. இது சுமார் 85.2% வரை உயரும் வாய்ப்புள்ளது. இந்த பங்கு சமீபத்தில் அதிகபட்ச விலையில் இருந்து சுமார் 40% வரை குறைந்துள்ளது, ஆனால் இந்த சரிவு மிக அதிகம் என தரகு நிறுவனம் கருதுகிறது.
உணவு டெலிவரி மற்றும் பிளிங்கிட் போன்ற உடனடி வர்த்தகங்கள் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி அடையும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிறுவனம் நீண்ட காலத்திற்கு நல்ல லாபம் ஈட்ட முடியும் என அந்த அறிக்கை கூறுகிறது.
திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ்:
திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் பங்கை வாங்கலாம் என ஜேஎம் ஃபைனான்ஷியல் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இலக்கு விலை ரூ.550 ஆக நிர்ணயித்துள்ளது. இதன் விலை சுமார் 24.7% வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
பெர்னோட் ரிகார்ட் நிறுவனத்திடம் இருந்து இம்பீரியல் ப்ளூ பிராண்டை வாங்கியதன் மூலம், இந்நிறுவனம் விஸ்கி தயாரிப்பில் பெரிய இடத்தை பிடித்துள்ளது.
இதன் மூலம் தயாரிப்பு மற்றும் சந்தை இரண்டிலும் நல்ல வளர்ச்சி இருக்கும் என தரகு நிறுவனம் நம்புகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM