சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு 39 வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கிறது - நீதிபதி தகவல்
மதுரை, 18 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடந்த 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த மார்ச் 6ஆம் தேதி விசாரணைக்கு வந்த
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 18 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடந்த 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த மார்ச் 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி, நான் கடந்த 11 வருடமாக சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு போராடி வருகிறேன்.

நாட்டு கருவேல மரங்கள் காயத்திற்கு பயன்படுகிறது.

ஆனால் சீமை கருவேல மரங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் தனியார் இடங்களில் உள்ள மரங்களையும் அகற்ற வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்றி நாட்டு மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் அப்போதுதான் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றார்.

அதனைத்தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கில் ரயில்வே துறையை தாமாக முன்வந்து இணைத்தது. பின்னர் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கினை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிரமான் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது,

சீமை கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக 39 உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் A.செல்வம் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மனுதாரர் கூறிய ஆலோசனைகளும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ செல்வம் தலைமையிலும், வட மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் ஆகியோர் கண்காணிப்பில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெறும் என்றனர்.

பின்னர் தமிழக மக்கள் சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நன்றி தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் தான் அதற்கான பலன் கிடைக்கும் என்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam