Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 5 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்தை குழுவில் உள்ள மாநில செயலாளர் வீரபாண்டியன்,முத்தரசன், சுப்பராயன்,பழனிசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொகுதி ஒப்பீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்திதார்.
அப்போது பேசிய அவர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தை குழுவினர் முதல்வரை சந்தித்தோம், நடிகர் ரஜினிகாந்த் குறித்த தவெக ஆதவ் ஆர்ஜூனா கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது கண்டிக்கிறது.
திமுக ஒருபோதும் கூட்டணி கட்சிகளை மிரட்டியது இல்லை திமுக மிரட்டுவதாக சொல்வது ஏற்புடையதல்ல,திமுக யாரையும் மிரட்டியது இல்லை,பாஜக தான் கூட்டணி கட்சிகளை மிரட்டி கூட்டணியில் சேர்க்கிறது எனவும் அவர்களது கருத்தை ஏற்கத்தக்கதல்ல எனவும் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் பெண் நடிகை குறித்து பேசிய வார்த்தை கண்ணியம் அற்ற வார்த்தை அதையும் கண்டிக்கிறோம் என கூறினார்.
பாஜக அமைதியான மண்ணை சீரழிக்க துடிக்கிறது. இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் குறிக்கோள் பாஜகவை அதன் கூட்டணியை வீழ்த்துவதுதான் எனவும் அந்த வகையில் முதல்வர் முன்மொழிந்து இருக்கக்கூடிய கூட்டாட்சி சமூக நல்லிணக்கம் சமூக நீதி நாடாளுமன்ற ஜனநாயகம் அதனைக் காக்க முதல்வருக்கு துணை நிற்போம் எனவும் கூறினார்.
சட்டமன்ற நாடாளுமன்ற எண்ணிக்கை ஏற்றம் இறக்கமாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் எப்போதும் உரிமைகளை அரசியல் கடமைகளை என்றைக்கும் கடந்து சென்றதில்லை, சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் இடம் வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் எனவும்உழைப்பு மக்களின் குரல் அங்கு ஒழிக்க வேண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் அங்கு ஒழிக்க வேண்டும் ஜனநாயக விழுமியங்கள் எப்போது பாதிக்கப்பட்டாலும் அதற்காக எப்போதும் ஒரு குரல் ஒழிக்க வேண்டும் என நாங்கள் கூட்டணி அமைக்கிறோம் பேச்சுவார்த்தை நடத்துகிறேன்.
திமுகவுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் கேட்டது கடந்த சட்டமன்ற தேல்தலில் போட்டியிட்ட ஆறு இடங்களை காட்டிலும் ஏழு இடங்களில் கேட்டோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் வைத்து மதிப்பிடக்கூடாது எனக் கேட்டோம் தொடர்ந்து மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. பல்வேறு கட்சிகள் இணைந்துள்ள காரணத்தினால் நாங்கள் உள்பட அனைவரும் கூட்டணி குறைத்துக் கொண்டோம் என தெவித்தார்.
6 இடங்களில் இருந்து 5 இடங்கள் என்பது கட்சி அணிகளை சோர்வடையச் செய்யும் இருந்தாலும் அதற்கு மேலாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் எங்களுக்கு இருக்கிறது எங்களுக்கான அரசியல் நிலவில் இருந்து ஒருபோதும் கடந்து செல்ல மாட்டோம் என தெரிவித்தார்.
எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார் ஆறாவது நீங்கள் பரிசலீக்க வேண்டும் என கேட்டோம் அதற்கும் வாய்ப்பு இல்லை ஒத்துழைக்க வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார் ஐந்து இடங்களில் ஒப்பந்தத்தில் ஐந்து இடங்களில் கையெழுத்து இருக்கிறோம் என தெரிவித்தார்.
ஒருபோதும் கட்டளையிடும் தோணியில் முதல்வர் கேட்கவில்லை, கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் ஒத்துழைக்க வேண்டும் பரிசீலிக்க வேண்டும் என முதல்வர் கேட்டார்.திமுகவோடு பேசும்போது சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ கட்டளையிடும் நோக்கத்திலோ அப்படி முதல்வர் பேசவில்லை என கூறினார்.
எங்கள் மாநில நிர்வாகி கூட்டத்தில் அதிக இடம் வேண்டுமென நிர்வாகிகள் தெரிவித்தனர். முதல்வரிடமும் அந்த கருத்தை எடுத்துரைத்தோம் அதற்கான சூழல் இல்லை என முதல்வரே தெரிவித்தார்.
திமுக கூட்டணி கொள்கை கூட்டணி தோழமைக் கட்சிகள் அணி சேர்ந்து இருக்கிறோம். எங்கள் கூட்டணி வெல்லும் எனவும் குறைந்த தொகுதிகள் கொடுத்து உள்ளதால்இதை பிண்ணனியாகவோ இழப்பாகவோ நாங்கள் கருதவில்லை எனவும் காலம் அதற்கான விடையை சொல்லும் எனவும் எங்கள் ஒரே குறிக்கோள் பாஜகவை வீழ்த்துவது எனவும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக சிதைத்து விட்டது எனவும் கூறினார்.
இந்தியாவில் மாறாத ஒரே சின்னம் கதிர்சின்னம் தான் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ