தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, 18 மார்ச் (ஹி.ச.) திமுக அரசின் திட்டங்கள் குறித்து ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோவை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, என் வாழ்நாளில் திமுகவுக்கு ஓட்டு போட்டது
தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)

திமுக அரசின் திட்டங்கள் குறித்து ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோவை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

என் வாழ்நாளில் திமுகவுக்கு ஓட்டு போட்டது கிடையாது. அது என்ன மேஜிக் என்று தெரியவில்லை. இந்த 2026 திமுகவுக்கு தான் நான் ஓட்டு போட போகிறேன்.

முதல்வர் ஸ்டாலின் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள ஒரு திட்டத்தை ரத்து செய்தாலும் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்

என கூறியுள்ளார்.

இந்த வீடியோவை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஆட்சிப் பொறுப்பேற்றதும், வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்த வீடியோவே சான்று.

நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும். தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b