தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 250 கம்பெனி துணை ராணுவ படையினர் இன்று தமிழகம் வருகை
சென்னை, 19 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுவை ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ஆம்
250 companies of paramilitary forces arrive


சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுவை ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்கனவே 50 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ படையினர் இன்று

(மார்ச் 19) தமிழகம் வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சான பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதன்படி மொத்தம் 300 கம்பெனி துணை ராணுவ படையைச் சேர்ந்த 20 ஆயிரம் வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஒரு சட்டமன்ற தொகுதிகக்கு ஒரு கம்பெனி என்ற அடிப்படையிலும், தேவையின் அடிப்படையில் ஒரு சட்டமன்ற தொகுதியில் கூடுதல் கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b