யுகாதி திருநாளையொட்டி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு அண்ணாமலை வாழ்த்து
சென்னை, 19 மார்ச் (ஹி.ச.) யுகாதி திருநாள் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமாகும். அந்த வகையில் யுகாதி திருநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், யுகாதி திருநாளையொட்டி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு தமிழக
யுகாதி திருநாளையொட்டி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு அண்ணாமலை வாழ்த்து


சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)

யுகாதி திருநாள் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமாகும். அந்த வகையில் யுகாதி திருநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், யுகாதி திருநாளையொட்டி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உலகெங்குமுள்ள தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு, இனிய உகாதி புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரின் வாழ்விலும் புதிய தொடக்கங்கள், நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிரம்பவும், இறைவன் அருளினால் அனைத்து வளங்களும் நிறைந்திருக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.

என தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM