Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 மார்ச் (ஹி.ச.)
சைத்ர நவராத்திரியின் முதல் நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் இன்று காலை சிறப்பு ‘ஆரத்தி’ வழிபாடுகள் நடைபெற்றன.
டெல்லியில் உள்ள ஜண்டேவாலன், சட்டர்பூர் கோவில்கள் மற்றும் மும்பையில் உள்ள மும்பா தேவி கோவில் உள்ளிட்ட தலங்களில் பக்தர்கள் அதிகாலை முதலே பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.
துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஒன்பது நாள் திருவிழாவின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற ‘ஆரத்தி’யின்போது, கோவில் மணியோசை மற்றும் பக்திப் பாடல்கள் முழங்க, ஆன்மிகச் சூழல் நிலவியது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பன்சூரி ஸ்வராஜ்,
அனைவருக்கும் சைத்ர நவராத்திரி நல்வாழ்த்துகள்.
தேவி அனைவரின் வாழ்விலும் செழிப்பை வழங்கட்டும். அன்னையின் அருள் நம் நாட்டின் மேல் நிலைத்திருக்கட்டும்.
என்று தெரிவித்தார்.
சைத்ர நவராத்திரி, இந்துப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் முக்கிய திருவிழாவாகும்.
இந்த ஒன்பது நாட்களிலும், பக்தர்கள் துர்கையின் ஒன்பது வடிவங்களையும் வழிபட்டு, விரதம் இருந்து, செழிப்பு மற்றும் நலன்களுக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.
இந்த திருவிழா, ஸ்ரீராமபிரானின் அவதார தினமான ‘ராம நவமி’யுடன் நிறைவடைகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகள், இரவு பஜனைகள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM