Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)
சென்னை கொடுங்கையூர் வேதாந்த முருகப்ப நாயக்கன் பிரதான சாலையில் பிரதம மந்திரியின் பாரத மக்கள் மருந்தகம் செயல்பட்டு வருகிறது.
அதன் எதிர்ப்புறம் கரிஷ்மா தங்க நகை கடையும் செயல் பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் அந்த பகுதியில் மின் இணைப்பு மழையின் காரணமாக துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை சாதகமாக பயன்படுத்திய இரண்டு கொள்ளையர்கள் முதலில் அந்த பகுதியில் உள்ள தங்க நகை அடகு கடையினை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.
அந்த முயற்சி பலனளிக்காததால் அதன் எதிர்ப்புறம் இருந்த பிரதம மந்திரியின் பாரத மக்கள் மருந்தகத்தின் ஷட்டர் கதவின் பூட்டினை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதனிடையே ஷட்டர் பூட்டு உடைக்கப்படும் சத்தம் கேட்டவுடன் அதிகாலையில் அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் தொழுகைக்காக மசூதிக்கு செல்லும் பொழுது கொள்ளையர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட அந்த சத்தம் கேட்டு அவர்கள் ஓடி வரவே கொள்ளையர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதைத் தொடர்ந்து
இது குறித்தான தகவலானது முதலில் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இரவு ரோந்து வாகனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது குறித்தான விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளை சம்பவம் நடக்க முயற்சித்த பகுதியானது சென்னை மணலி காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வரவே மணலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை மணலி குற்றப்பிரிவு காவல்துறையினர் இது குறித்தான விசாரணை துவக்கிய போது கொள்ளையன் ஒருவன் கையில் இரும்பு கம்பியை கொண்டு பிரதம மந்திரியின் பாரத மக்கள் மருந்தகத்தில் ஷட்டர் பூட்டையை உடைத்து உள்ளே கொள்ளையடிக்க முயற்சி செய்யும் காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு தற்போது சென்னை மணலி குற்ற பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வராத பட்சத்தில் நகைக்கடை பூட்டை உடைக்க மீண்டும் முயற்சித்து உள்ளே இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போய் இருக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ரெயின் கோட் அணிந்து கடப்பாரை கொண்டு பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ