கூட்டணி குறித்து பேச மத்திய அமைச்சர் புதுச்சேரி வந்து கொண்டிருக்கும் நிலையில் திருச்செந்தூர் புறப்பட்டார் முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி, 19 மார்ச் (ஹி.ச.) முதலமைச்சர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் இருந்து தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வர உள்ள நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தேசிய ஜனநாயக
CM Rangasamy


புதுச்சேரி, 19 மார்ச் (ஹி.ச.)

முதலமைச்சர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் இருந்து தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வர உள்ள நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமியிடம் கடந்த வாரம் தொகுதி பங்கீடு குறித்து

பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளும், பாஜக + அதிமுக 14 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், லஜக கட்சியை கூட்டணியில் சேர்க்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை முதலமைச்சர் ரங்கசாமி வைத்த நிலையில் பாஜக அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை.

நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்து இருந்தார்.

நேற்றைய தினம் டெல்லியில் பாஜக பார்லிமென்டரி போர்டு கமிட்டி கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் நித்தின் நபின் தலைமையில் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி சார்பில் பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் நிபந்தனைகள் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மன்சுக் மாண்டவியா இன்று மதியம் புதுச்சேரி வரவுள்ள நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்ய திருச்செந்தூர் புறப்பட்டு சென்றுள்ளார்.

இதனால் கூட்டணி இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN