காங்கிரஸ் கட்சி கொடி கட்டி வந்த காரில் பறக்கும் படையினர் சோதனை கட்சி கொடி நீக்கம்
சென்னை, 19 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பறக்கும் படைகள் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் தீவ
Elec


சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பறக்கும் படைகள் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் தீவிர வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகளவு பணம், நகைகள், மதுபானங்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்கப்படக்கூடிய பரிசுப் பொருட்கள் ஆகியவை எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதையும்

சோதனைகளின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகின்றன.

அந்த வகையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் இன்று பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது காரில் காங்கிரஸ் கட்சி கொடி கட்டி வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை நடத்தினர். அதன் பிறகு காரில் கட்டி இருந்த காங்கிரஸ் கட்சி கொடியை நீக்குமாறு ஓட்டுனருக்கு பறக்கும் படை அதிகாரி வலியுறுத்தினார்.

அதன் பெயரில் ஓட்டுநர் கட்சி கொடியை கழற்றி தன் காரில் வைத்துக்கொண்ட பிறகு காரை அதிகாரி அனுப்பி வைத்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ