யுகாதி திருநாளில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சென்னை, 19 மார்ச் (ஹி.ச.) யுகாதி பண்டிகையை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார். எக்ஸ் தள வாழ்த்துச் செய்தியில்
யுகாதி திருநாளில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)

யுகாதி பண்டிகையை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தள வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது,

உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், தங்கள் மொழிகளைக் கடந்து சகோதர-சகோதரிகளாக, தமிழர்களின் இன்ப துன்பங்களிலும் பங்கேற்று ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.

யுகாதி திருநாளில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் எனவும்; இன்னல்கள் நீங்கி இன்பம் சேர வேண்டும் எனவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b