அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் டெல்லி பயணம்
சென்னை, 19 மார்ச் (ஹி.ச.) 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தல்
Sudden Visit to Delhi


சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் முதலாவதாக கூட்டணியை உறுதி செய்த அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை இன்னும் வெளிப்படையாக தொடங்கவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிடையே நிலவும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விரைவில் தமிழகம் வர உள்ளார்.

பாஜக 30 தொகுதிகளை கேட்பதால் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அதிமுகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளான சென்னை தி.நகர், மயிலாப்பூர், விருகம்பாக்கம், வேளச்சேரி, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், அவிநாசி, ஓசூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜகவும் பட்டியலிட்டு, அதிமுகவிடம் தொடர்ந்து கேட்டு வருவதால் தொகுதிகளை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு தொடர்பாக அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b