Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பாலியல் சம்பவங்களை கண்டித்து சில தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ஆட்சி முடிந்தும் போகும்போது, உங்கள் கனவை சொல்லுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்கிறார்.
எனக்கு நயன்தாரா வேண்டும். எனது கனவை நிறைவேற்றுவாரா என பேசினார். சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.
இதனை கண்டிக்கும் வகையில் பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகளான தேர் நிலையம், மத்திய பேருந்து நிலையம், காந்தி சிலை சிக்னல், திருவள்ளுவர் திடல் போன்ற பகுதிகளில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம், எம்ஆர் விஜயபாஸ்கர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுன் உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து பெண்களுக்கு எதிராக அதிமுக என்ற தலைப்பில் பெண்களை இழித்தும் பழித்தும் பேசி வரும் அதிமுகவினரை கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் என வாசகங்களுடன் ரவுண்டானாக்களில் உள்ள கம்பங்களில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அதிமுகவினர் புகார் கொடுத்த பிறகே, விரைந்து வந்த போலீசார் சர்ச்கைக்குரிய அந்த 3 பேரின் கட்-அவுட்டுகளை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து செருப்பு மாலை கட்-அவுட் கட்டியவர்கள் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / vidya.b