Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 மார்ச் (ஹி.ச.)
புதுக்கோட்டையைச் சேர்ந்த நந்தினி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், கணவனைக் கொலை
செய்த வழக்கில் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஆயுள்
தண்டனை ரத்து செய்யக்கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், தனபால் அமர்வு,
மனுதாரருக்கு திருமணத்திற்கு முன்பு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்ததாகவும்,
விருப்பமின்றி திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கணவனை கொலை செய்ததாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் செருப்பு மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பார்த்து தனது மகன் என
அடையாளம் கூறியதாக கூறப்பட்டுள்ளது.
இது போதுமான ஆதாரமல்ல. பெற்றோரின் DNA
எடுக்கப்பட்டிருந்தாலும் அது பரிசோதனைக்கு அனுப்பப்படாதது குறையே. இறந்தவரின் அடையாளத்தை உறுதி செய்யாமல் மற்ற ஆதாரங்களை ஆய்வு செய்து கீழமை
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றச்சாட்டை அரசுத்தரப்பு நிரூபிக்க முடியவில்லை. கண்டெடுக்கப்பட்ட உடல் உண்மையிலேயே இறந்தவருடையதுதானா? என்பதும் தெரியவில்லை. ஆகவே இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து
செய்யப்படுகிறது.
மனுதாரர் விடுவிக்கப்படுகிறார் என உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam