Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)
தெலுங்கு, கன்னட மக்கள் உகாதி பண்டிகையை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
உலகம் முழுவதும் வாழும் அன்பான தெலுங்கு மற்றும் கன்னட உறவுகளுக்கு என் இதயம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகள்!
இந்த புது வருடம் உங்கள் வாழ்வில் புதிய வாய்ப்புகளை மலரச் செய்யட்டும். ஒவ்வொரு நாளும் நம்பிக்கையால் நிரம்பி, ஆரோக்கியம் உறுதியாக இருந்து, செழிப்பும் சந்தோஷமும் உங்கள் இல்லங்களை ஒளிரச் செய்யட்டும்.
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகி, கனவுகள் நனவாகும் இனிய நாளாக இந்த உகாதி அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b