அம்பாசமுத்திரம் அருகே பழைய இரும்பு கடை உரிமையாளரை அடித்து கொலை செய்த தொழிலாளி கைது
நெல்லை, 19 மார்ச் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளித்தெரு பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் வனராஜ் (60) இவரது கடையில் மாயாண்டி (26) என்பவர் டிரைவராக பணிபுரிந்தார். மேலும் இரும்பு தரம் பி
கொலை


நெல்லை, 19 மார்ச் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம்

கட்டப்புளித்தெரு பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் வனராஜ் (60) இவரது கடையில் மாயாண்டி (26) என்பவர் டிரைவராக பணிபுரிந்தார்.

மேலும் இரும்பு

தரம் பிரிக்கும் வேலையிலும் மாயாண்டி ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயாண்டியின் வேலை பிடிக்காமல் போனதால் அவரை வேலைக்கு வரவேண்டாம் என கடையின் உரிமையாளர் வனராஜ் கூறியுள்ளார்.

இதனால் வனராஜ் மீது மாயாண்டி ஆத்திரத்தில் இருந்துள்ளார். மேலும் வனராஜ் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

பணம் கொடுக்க மறுத்ததால் சில தினங்களுக்கு முன் வனராஜின் பழைய இரும்பு குடோனில் வைத்து மாயாண்டி வனராஜின் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி அடித்து

தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வனராஜிக்கு நெல்லையில் தனியார்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . வனராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பாளை அரசு மருத்துவக்

கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விக்ரமசிங்கபுரம் போலீசார் முதலில் மாயாண்டி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது அதனை கொலை வழக்காக மாற்றி

உள்ளனர்.

மேலும் வனராஜை கொலை செய்ய பணத் தகராறு தான் காரணமா? இல்லை கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam