Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மார்ச் (ஹி.ச)
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் கீழ் தொடங்கப்பட்ட கூகை திரைப்பட இயக்கம் என்ற நூலகமானது வளசரவாக்கம், பிரகாசம் சாலையில் அமைந்துள்ளது. இந்த நூலகத்திற்கு கீழே பொருநை தேனீரகம் என்ற டீக்கடையை கார்த்திக் என்பவர் நடத்தி வருகிறார்.
டீக்கடைக்கு எதிரே ஜமால் என்பவர் J & J Digital colorlab and studio நடத்தி வருகிறார். இந்த நிலையில், கூகை திரைப்பட நூலகத்திற்கு வருகை தரும் நபர்கள் கீழே அமைந்துள்ள டீக்கடைக்கு தேநீர் அருந்த வரும்பொழுது தங்களது ஸ்டூடியோக்கு வரும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாக கூறி ஜமால் என்பவர் இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் என கார்த்திக் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து டீக்கடை உரிமையாளர் கார்த்திக் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக டீக்குடிக்க வருபவர்கள் தங்களது ஸ்டுடியோ வரும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வருவதாகக்கூறியும், டீக்கடை இருப்பதால் தான் இந்த பிரச்சனை எனவும், டீக்கடை உரிமையாளரான கார்த்திக் என்பவரை ஜமால் மற்றும் அவரது நண்பர்கள் சென்று தாக்கியுள்ளனர்.
புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ