பெரம்பலூர் அருகே வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்  தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி
பெரம்பலூர், 19 மார்ச் (ஹி.ச.) பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் இயங்கி வரும் தனியார்(தவசி) கேஸ் ஏஜென்சி மூலம் குரும்பலூர், செஞ்சேரி, ஈச்சம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம், குரூர், செட்டிக்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சமையல் சில
சிலிண்டர்


பெரம்பலூர், 19 மார்ச் (ஹி.ச.)

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் இயங்கி வரும் தனியார்(தவசி) கேஸ் ஏஜென்சி மூலம் குரும்பலூர், செஞ்சேரி, ஈச்சம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம், குரூர், செட்டிக்குளம்

உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சமையல் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 10 நாட்களாக சிலிண்டர் விநியோகம் தாமதமாகி வருவதால், பதிவு செய்த பொதுமக்கள் 5 நாட்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சிலிண்டர் லோடு வந்ததாக தகவல் அறிந்த பொதுமக்கள், காலை 6

மணி முதலே காலியான சிலிண்டர்களுடன் ஏஜென்சி முன்பு நீண்ட வரிசையில்

காத்திருந்தனர்.

கடும் வெயிலும், குடிநீர் மற்றும் உணவு வசதிகள் இல்லாத சூழலிலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதால் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

கடந்த ஒரு வாரமாக சிலிண்டர் கிடைக்காததால் வீட்டு சமையல் செயல்பாடுகள்

முடங்கியுள்ளதுடன், தி

னசரி வாழ்க்கையும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது என பொதுமக்கள் வேதனை

தெரிவித்தனர்.

இது குறித்து ஏஜென்சி நிர்வாகத்திடம் கேட்டபோது,

எங்களுக்கு கிடைக்கும் லோடு அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி சிலிண்டர்கள் வழங்கி வருகிறோம் என

விளக்கம் அளித்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் தனியார் ஏஜென்ஸிஸ் மூலம் வழங்கப்படும்

சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும்

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam