நெல்லை மாவட்ட ஊத்து பகுதியில் 10 வாக்குகளுக்காக வாக்குச்சாவடி மையம் அமைப்பு
நெல்லை, 19 மார்ச் (ஹி.ச.) நெல்லை மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், மணிமுத்தாறு அணையிலிருந்து ஏறத்தாழ 30 கிலோமீட்டர் தூரத்தில் மாஞ்சோலை எனும் ஊர் உள்ளது. அதிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் நாலுமுக்குவும், அங்கிருந்து 10 கி.மீ தூரத்தில்
நெல்லை மாவட்ட ஊத்து பகுதியில் 10 வாக்குகளுக்காக வாக்குச்சாவடி மையம் அமைப்பு


நெல்லை, 19 மார்ச் (ஹி.ச.)

நெல்லை மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், மணிமுத்தாறு அணையிலிருந்து ஏறத்தாழ 30 கிலோமீட்டர் தூரத்தில் மாஞ்சோலை எனும் ஊர் உள்ளது.

அதிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் நாலுமுக்குவும், அங்கிருந்து 10 கி.மீ தூரத்தில் ஊத்து பகுதிகளும் உள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு வரை சிறந்த சுற்றுலா இடமாக இருந்த மாஞ்சோலையில் ஆயிரக்கணக்கான தேயிலை தொழிளாலர்கள் வேலை செய்து வந்தார்கள்.

பிறகு தேயிலை தோட்டம் மூடப்பட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் ஏராளமானோர் அவர்களுடைய குடும்பத்துடன் மலையிலிருந்து கீழே வந்து வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.

மாஞ்சோலை அம்பை சட்டமன்ற தொகுதியில் உள்ளது. இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, குதிரைவெட்டி போன்ற தேயிலை தோட்டங்களில் இருந்த வாக்காளர்கள் மொத்தம் 1,650 பேர்.

கடந்த வருடம் டிசம்பர் மாத்தில் நடந்த முக்கியமான வாக்காளர் திருத்தத்திற்கு பிறகு வாக்காளர்கள் வேறு இடத்திற்கு போனதாலும் மற்றும் சில காரணங்களாலும் அங்கு இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 78 ஆக குறைந்தது.

மாவட்ட நிர்வாகம் இறுதியான வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில் மாஞ்சோலையில் 35 வாக்குகளும், நாலுமுக்கில் 33 வாக்குகளும், ஊத்தில் 10 வாக்குகளும் என மொத்தம் 78 வாக்குகள் மட்டுமே இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னால் மாஞ்சோலையில் 5 வாக்குச்சாவடிகள் இருந்தது. அதில் மாஞ்சோலை மேற்கு (வாக்குச்சாவடி எண் 98), காக்காச்சி மற்றும் நாலுமுக்கு பகுதிகளுக்கான கூட்டு வாக்குச்சாவடி (வாக்குச்சாவடி எண் 99), நாலுமுக்கு கிழக்கு (வாக்குச்சாவடி எண் 100), ஊத்து (வாக்குச்சாவடி எண் 101), குதிரை வெட்டி (வாக்குச்சாவடி எண் 102) போன்றவைகள் இருந்தது. இப்போது அங்கு மாஞ்சோலை (106), நாலுமுக்கு (107), ஊத்து (108) என 3 வாக்குச்சாவடிகளாக குறைத்துவிட்டார்கள்.

இதில் ஊத்து வாக்குப்பதிவு மையத்தில் மொத்தமாக 10 வாக்காளர்களே இருக்கிறார்கள். அங்கு 10 வாக்குகள் போடுவதற்காக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.

இதற்காக மணிமுத்தாறு தரைப்பகுதியில் இருந்து சுமார் 40 கி.மீ தூரத்திற்கு மலைப்பாதை வழியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் வேலைக்காக போக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கொல்லிமலை எஸ்டேட்டில் ஒரு வாக்குச்சாவடியில் 5 வாக்குகள் மட்டும் தான் இருக்கிறது.

இதனை தொடர்ந்து ஊத்து எஸ்டேட் பகுதி இரண்டாவது இடத்தில் இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / JANAKI RAM