100-க்கும் மேலான உளவாளிகள் கைது நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பின்னடைவு - ஈரான் தகவல்
தெஹ்ரான், 19 மார்ச் (ஹி.ச.) ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு விரோதமாக உளவு பார்த்த குற்றத்திற்காக 100-க்கும் அதிகமான நபர்களை கைது செய்து ஈரான் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது
100-க்கும் மேலான உளவாளிகள் கைது நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பின்னடைவு - ஈரான் தகவல்


தெஹ்ரான், 19 மார்ச் (ஹி.ச.)

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு விரோதமாக உளவு பார்த்த குற்றத்திற்காக 100-க்கும் அதிகமான நபர்களை கைது செய்து ஈரான் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து ஈரானின் அரசாங்க அதிகாரிகள் குறிப்பிடுகையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றத்திற்காக 100-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

அந்த இரண்டு நாடுகளுடன் கூட்டு சேர்ந்து அவர்களின் தேவைக்காக செயல்பட்டதால் அவர்கள் தேச விரோதிகள் என்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானின் 31 மாகாணங்களில், 26 மாகாணங்களில் இயங்கி வந்த அமெரிக்க ஆதரவு பெற்ற முடியாட்சிக்கு ஆதரவான 111 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஈரானுக்கு வெளியில் உள்ள தீவிரவாத ஊடகங்களுக்கு காணொளிகளை அனுப்பிய 21 நபர்களை கைது செய்துள்ளோம் என்றும் ஈரான் கூறியுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாரேனும் இருந்தால், அவர்களைப் பற்றி தகவல் கொடுக்கும்படி பொதுமக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரான் அரசாங்கம் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேலாக இணைய சேவையை நிறுத்தி வைத்ததால், 9.2 கோடி மக்கள் இணைய வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதன் விளைவாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று ஈரான் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM