Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 19 மார்ச் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 70 சதவீதம் விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பினும் பலரும் கால்நடை வளர்ப்பை சார்ந்தே உள்ளனர்.
அதன்படி, அச்சிறுபாக்கம் அடுத்த எலப்பாக்கம், ராமாபுரம், பெரும்பாக்கம், எல்.எண்டத்துார் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் மதுராந்தகம் அடுத்த குமாரவாடி, நெல்வாய், மேலக்கண்டை, ஜமீன் எண்டத்துார் உள்ளிட்ட பகுதிகளிலும், தர்ப்பூசணி சாகுபடி செய்யப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்ப்பூசணி, தற்போது அறுவடை பணி துவங்கி, கடந்த 10 நாட்களாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.இவை, புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஒரு டன் 10,500 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தர்ப்பூசணி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில்,
இரண்டு மாத பயிர் தான் தர்ப்பூசணி. எங்களிடம் இருந்து வியாபாரிகள் விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். இந்தாண்டு தர்ப்பூசணியால் நல்ல லாபம் கிடைத்துள்ளது.
நல்ல தரமான விளைச்சல் அதிகம் உள்ள விதைகளை விவசாயிகளுக்கு அளிக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b