Enter your Email Address to subscribe to our newsletters

காக்கிநாடா, 02 மார்ச் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் இருக்கும் வெட்லபாலெம் கிராமத்தில் ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.
இந்த ஆலையில் பலரும் பேர் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி அந்த பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வேலை செய்து கொண்டிருந்த 9 பெண்கள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 9 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இப்போது 4 முதல் 5 பேர் வரை மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் சிலருக்கு 90 சதவீதம் வரை தீக்காயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM