பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் பட்டியல், மாணவர்கள் தேர்வு எழுதிய பின் அன்று மாலை வெளியிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை, 02 மார்ச் (ஹி.ச.) சென்னை தி. நகர் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல் நிலை பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.
Anbil Mahesh


சென்னை, 02 மார்ச் (ஹி.ச.)

சென்னை தி. நகர் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல் நிலை பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு நேற்று முதலமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதேபோல பள்ளி கல்வித்துறை சார்பாக நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழகத்தில் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றார்கள். அதேபோல தனித் தேர்வர்கள் 27 ஆயிரத்து 501 தேர்வு எழுதுவதாகவும், தமிழக முழுவதும் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர் என்று கூறினார்.

மாணவ மாணவியர்கள் இரவு முழுவதும் படித்துக் கொண்டு உடல் நலனை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இரவு முழுவதும் சாப்பிடாமல், உறங்காமல் படித்துவிட்டு தேர்வு அறையில் சென்று உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறினார்.

சரியான நேரத்தில் அந்தந்த பாடங்களை படித்துவிட்டு வந்து தேர்வு எழுத வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் எந்த ஒரு அழுத்தமும் கொடுக்க வேண்டாம் என்றும் கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கான ரிசல்ட் மட்டுமில்லை இது ஆசிரியர்களுக்கான ரிசல்ட் தான் இந்த நேரத்தில் ஆசிரியர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

விருதுநகர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதுவதற்காக சென்ற மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்க கூடிய செய்தி என்பது வருத்தம் அளிப்பது ஆகவும் இனிவரும் காலங்களில், முடிந்து வரை அருகில் உள்ள தேர்வு மையங்கள் தான் ஒதுக்கப்படுகிறது.

தேர்வுகளில் எந்த ஒரு முறையீடும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது தங்கள் பொறுப்பு என்று கூறினார்.

அதேபோல பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் பட்டியல் என்பது தேர்வின் அன்று மாலையை வெளியிடப்படும் என்றும், கடந்த வருடம் வெளியிடப்படவில்லை என்றும் ஆனால் அதற்கு முன்பாக மாலை வெளியிடப்பட்டது அதேபோல தற்போது மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ