Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 02 மார்ச் (ஹி.ச)
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், தேர்வு எழுத கூடிய மாணவ மாணவிகளுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இன்று தொடங்கவுள்ள, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிக் கல்வியின் இறுதியாண்டில் இருக்கும் உங்கள் அனைவருக்கும், சிறப்பான எதிர்காலம் அமைய எனது பிரார்த்தனைகள்.
அனைவரும் நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உங்கள் பெற்றோரையும், ஆசிரியப் பெருமக்களையும் பெருமைப்படுத்த நல்வாழ்த்துக்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ