Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 02 மார்ச் (ஹி.ச.)
கோவை மாவட்டம், காரமடையில் உள்ள ரங்கநாதர் திருக்கோவிலில் தேர்த்திருவிழா இன்று
(மார்ச் 2) மாலை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோவை மாநகர போக்குவரத்துக்கு காவல்துறை பரிந்துரைத்துள்ள போக்குவரத்து மாற்றங்கள் பின்வருமாறு:
1) மேட்டுப்பாளையம் → கோவை நோக்கி செல்லும் இலகு வாகனங்கள்:
மேட்டுப்பாளையம் - காந்திநகர் ஜங்ஷன் - சின்னத் தொட்டிபாளையம் -பெள்ளாதி - - கண்ணார்பாளையம் 4 ரோடு ஜங்ஷன் - கோட்டை பிரிவு ஜங்ஷன் -வழியாக கோவை செல்ல வேண்டும்.
2) மேட்டுப்பாளையம் → கோவை செல்லும் கனரக வாகனங்கள்:
மேட்டுப்பாளையம் - தென்திருப்பதி நால்ரோடு -> அன்னூர் -> கோவில்பாளையம் -வழியாக கோவை செல்ல வேண்டும்.
3) கோவை → மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள்: பெரியநாயக்கன்பாளையம் - பெட்டதாபுரம் - திம்மம்பாளையம் - மங்களக்கரை புதூர் -டீச்சர்ஸ் காலனி பாலம் வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும்.
வாகன நிறுத்தம்:
திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்களது வாகனங்களை காவல்துறை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். அனுமதியில்லாமல் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவிழாவை முன்னிட்டு போதிய அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரோந்து பணிகள் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி, அறிவுறுத்தப்பட்ட வழித்தடங்களைப் பின்பற்றி பயணிக்குமாறு கோவை மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b