மனைவியின் நடத்தையில் சந்தேகம் - தனது 2 மகள்களை கொன்ற தந்தை
சென்னை, 02 மார்ச் (ஹி.ச.) சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (35), பெயிண்டர். இவரது மனைவி பிரீத்தி (28). இவர்களுடைய மகள்கள் லியா (7), சுபிஷா (4). மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி பிரதீப் அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெர
Chennai


சென்னை, 02 மார்ச் (ஹி.ச.)

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (35), பெயிண்டர்.

இவரது மனைவி பிரீத்தி (28). இவர்களுடைய மகள்கள் லியா (7), சுபிஷா (4). மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி பிரதீப் அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

பிரீத்திக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி, மனைவியை கண்டித்து வந்த பிரதீப், சந்தேக நபர் மீது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புழல் போலீசிலும் புகார் செய்துள்ளார்.

பிரதீப்பின் நடத்தையை பிடிக்காத பிரீத்தி, தனது மகள்களை கணவரிடம் விட்டு விட்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனிடையே, சந்தேக புத்தி கொண்ட பிரதீப், தனது மகள்கள் லியா, சுபிஷாவுடன் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி மாமல்லபுரம் சென்றார். அங்கு ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த அவர், தனது அறையில் இருந்தவாறே சென்னையில் உள்ள தனது உறவினருக்கு, அழுதுகொண்டே வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலில் பேசி தான், தன்னுடைய குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி இணைப்பை துண்டித்தார்.

இதனிடையே, பிரதீப் பேசியதை கேட்டு பதறிப்போன உறவினர், இதுகுறித்து சென்னையில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களை உடனடியாக பிரதீப் இருந்த மாமல்லபுரம் விடுதிக்கு சென்று தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்படி, பிரதீப் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற உறவினர்கள், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள உறவினர்கள் பதறியடித்து மாமல்லபுரம் விரைந்து வந்து, போலீசாருடன் சென்று அவர் தங்கிய விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது, கட்டிலில் லியா, சுபிஷா இருவரும் இறந்து கிடந்தனர்.

பிரதீப் ரசாயனம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அவரை மாமல்லபுரம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் 2 வாரங்களுக்கு பிறகு தனது 2 மகள்களை கொன்றதாக கொலை வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, மனைவி மீது உள்ள கோபத்தில் எனது 2 மகள்களையும் மாமல்லபுரம் அழைத்து வந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்தேன்.

முதலில் விடுதி குளியல் அறையில் தண்ணீர் நிரப்பிய வாளியில் எனது 2 மகள்களையும் தலையை மூழ்கடித்து கொலை செய்தேன்.

பிறகு தயாராக வைத்திருந்த ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN