Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மார்ச் (ஹி.ச)
சென்னை,ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கு பின்புறம் பார்க்கிங் பகுதி அருகே உள்ள உள்ள பிரதான சாலையில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் ஒருவருக்கு ஒருவரை ஆபாசமாக பேசிக் கொண்டும், தாக்கி கொண்டனர்.
சம்பவத்தின் போது, “என் ஆண் நண்பரை நீ எப்படி அடிக்கலாம்” என கூறிய இளம்பெண் ஒருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அனைவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து அண்ணா சாலை போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர் விசாரணையில் சண்டையிட்டவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், அனைவரும் சத்தியம் திரையரங்கு அருகே உள்ள LMU என்ற தனியார் மதுபான பாரில் நேற்று NOON PARTY நடைப்பெற்றுள்ளது.
மதியம் தொடங்கிய பார்ட்டி மாலை 6 மணியளவில் முடிந்துள்ளது.
ஆட்டம் பாட்டம் என முடித்து போதையில் தள்ளாடியப்படியே வெளியே வந்த கும்பலில் இருந்த பெண்ணின் முடியை பிடித்து யாரோ ஒருவர் இழுத்துள்ளார்.
இதனால் இருகுழுவிற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
முதலில் அங்குள்ள டீக்கடையில் தாக்கி கொண்டவர்கள் பின்னர் சாலையின் நடுவே, மெட்ரோ வேலை செய்யும் இடம் என சாலையிலே மாறி மாறி தாக்கி கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
பவுன்சர்கள் தடுத்தப்போதும் அவர்கள் விரட்டி விரட்டி சண்டையிட்டு கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பார் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி சண்டையிட்டவர்களின் விவரங்களை சேகரித்து 5 மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பார் நிர்வாகத்திடம் புகாரை பெற்று விசாரணை நடைப்பெற்று விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ