மாசி மகத்தை முன்னிட்டு வெள்ளி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கடலூர், 02 மார்ச் (ஹி.ச.) கடலூர் மாசி மகத்தை ஒட்டி தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கடலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஐந்துக்கு மேற்பட்ட சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு மாசி மாத தீர்த்தவாரி நடைபெற்றது. மேலும் வெள்ளிக் கடற்கரையில் ஏராளம
தர்ப்பணம்


கடலூர், 02 மார்ச்

(ஹி.ச.)

கடலூர் மாசி மகத்தை ஒட்டி தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கடலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஐந்துக்கு மேற்பட்ட சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு மாசி மாத தீர்த்தவாரி நடைபெற்றது.

மேலும் வெள்ளிக் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடினர்.

இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் சுவாமிகள் தீர்த்தவாரி நடைபெற்றது.

தீர்த்தவாரியை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாசி மகத்தையொட்டி கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வன்னியர்பாளையத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் சேவல் குமார் தலைமை தாங்கினார் பகுதி செயலாளர்கள் கெமிக்கல் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவு வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam