நண்பர்களுக்கிடையே மோதல், வயது அதிகமானவரை எப்படி கலாய்க்கலாம் எனக்கூறி திமுக பிரமுகர் மீது தாக்குதல்
சென்னை, 02 மார்ச் (ஹி.ச.) சென்னை கோயம்பேட்டை சேர்ந்த கணேஷ் (32), திமுகவில் 127வது வட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ள நிலையில், நேற்று அவரது நண்பர்களான சுந்தரம் மற்றும் கணேஷ் ஆகியோர் சென்ற போது கணேஷ் சுந்தரத்தை பார்த்து வெள்ளை என்று அழைத்துள்ளா
தாக்குதல்


சென்னை, 02 மார்ச் (ஹி.ச.)

சென்னை கோயம்பேட்டை சேர்ந்த கணேஷ் (32), திமுகவில் 127வது வட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ள நிலையில், நேற்று அவரது நண்பர்களான சுந்தரம் மற்றும் கணேஷ் ஆகியோர் சென்ற போது கணேஷ் சுந்தரத்தை பார்த்து வெள்ளை என்று அழைத்துள்ளார்.

மது போதையில் வந்த இருவரும் வயது மூத்தவரை எப்படி வெள்ளை என அழைப்பாய் எனக் கூறி கையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து கணேஷின் தலையில் உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

ரத்த காயமடைந்த கணேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிஎம்பிடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam