பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர்-சென்னை ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை, 02 மார்ச் (ஹி.ச.) மதுரை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரியில் இருந்து வருகிற 7, 14, 21, 28 ஆ
Guruvayur-Chennai train service changed


சென்னை, 02 மார்ச் (ஹி.ச.)

மதுரை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரியில் இருந்து வருகிற 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்

(வண்டி எண்.12666), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக ஹவுரா செல்லும்.

இந்த ரெயில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் போன்ற நிலையங்களில் நிற்காது. சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கூடுதலாக நிற்கும்.

குருவாயூரில் இருந்து வருகிற 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் காலை 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் ரெயில் (16128), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக எழும்பூர் வரும்.

இந்த ரெயில் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை போன்ற நிலையங்களில் நிற்காது.

சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கூடுதலாக நிற்கும்.

கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07229), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக ஐதராபாத் செல்லும்.

இந்த ரெயில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் போன்ற நிலையங்களில் நிற்காது.

அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கூடுதலாக நிற்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b