இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது குரல் கொடுப்போர் இந்துக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? - ஹெச்.ராஜா கேள்வி
சென்னை, 02 மார்ச் (ஹி.ச) இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது குரல் கொடுப்போர் இந்துக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி
Hraja


Hs


சென்னை, 02 மார்ச் (ஹி.ச)

இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது குரல் கொடுப்போர் இந்துக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

பாலஸ்தீனத்தில் இருந்து செயல்பட்டு வந்த ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கங்களுக்கு ஈரானில் இருந்து நிதி உதவியும், ஆயுத உதவியும் செய்து வந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத தலைவர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி அழித்ததற்கு.

இங்கு கண்ணீர் வடித்து, கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி அமைதியற்ற சூழ்நிலையை இந்தியாவில் உருவாக்க முயலும் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களும், அவர்களை வாக்கு வங்கி அரசியலுக்காக மதசார்பின்மை பேசி ஆதரிக்கும் இங்குள்ள அரசியல் கட்சிகளும்.

பாரதத்தின் அண்டை நாடான வங்காளதேசத்திலும், பாரதத்தின் ஓர் அங்கமான மேற்குவங்க மாநிலத்திலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட போதும், இந்துக்களின் வீடுகளும், உடமைகளும் சூரையாடப்பட்ட போதும் அமைதி காத்து மெளனமாக இருந்தது ஏன்?

இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது மட்டும் மதசார்பின்மை பேசும் அரசியல் கட்சிகள் அமைதி காத்து மெளனமாக இருப்பது அப்படமான இந்து விரோதம் மட்டுமல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ