Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 02 மார்ச் (ஹி.ச.)
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் பதிலடி தாக்குதலில் இறங்கியது.
பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உட்பட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங் களை ரத்து செய்தன.
அந்த வகையில் புதுடெல்லியில் இருந்து 3வது நாளாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையில் பாதிப்பு காணப்படுகிறது. 2 நாட்களில் 750 விமான சேவைகளும், இன்று ஒருநாள் மட்டும் 87 சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
டில்லி விமான நிலையத்தில் இருந்து 37 புறப்பாடுகளும், 50 வருகைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் காரணமாக, 2 நாட்களில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களின் 750 விமான சேவைகள் ரத்தாகி இருக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b