Enter your Email Address to subscribe to our newsletters

ஜலந்தர், 02 மார்ச் (ஹி.ச.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் இருக்கும் இரண்டு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டன.
உடனடியாக காவல் அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் குழுவினர், மோப்ப நாய்கள் அடங்கிய குழு மற்றும் அவசர ஊர்திகள் பள்ளி வளாகத்திற்கு விரைந்து வந்தனர்.
தேடுதல் வேட்டையில் சந்தேகப்படும்படியாக எந்தவிதமான பொருட்களும் கண்டறியப்படவில்லை.
இதன் விளைவாக வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பள்ளிகளில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதற்கு முன்னதாக சென்ற பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியும், பஞ்சாப் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
ஆனால் வெடிக்கக்கூடிய எந்தவிதமான பொருட்களும் கிடைக்கவில்லை.
அதே போன்று கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி சண்டீகரில் இருக்கின்ற பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன.என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM