கோவில்பட்டி அருகே செயல்பட்டு வரும் குச்சிக் குடோனில் பயங்கர தீ விபத்து - 2 தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் மீட்பு
தூத்துக்குடி, 02 மார்ச் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள பாண்டவர்மங்கலம் பகுதியில் பசுவந்தனை சாலையில் தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையின் எதிரே அந்த தீப்பெட்டி ஆளைக்கு சொந்தமான குச்சி குடோன் உள்ளது. அந
தீ விபத்து


தூத்துக்குடி, 02 மார்ச் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள பாண்டவர்மங்கலம் பகுதியில் பசுவந்தனை சாலையில் தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது.

இந்த ஆலையின் எதிரே அந்த தீப்பெட்டி ஆளைக்கு சொந்தமான குச்சி குடோன் உள்ளது.

அந்த குடோனில் இன்று காலையில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது.

அதில் மூன்று தொழிலாளர்கள் சிக்கி தவித்துக் கொண்டு இருந்தனர் இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் உள்ளே சிக்கி இருந்த இரண்டு தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஒரு தொழிலாளர் உள்ளே சிக்கி உள்ளார் அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த குடோனின் முழுவதும் சேதமடைந்துள்ளது.

குடோன் முன்பிருந்த வாகனமும் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமாகி உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam