Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 02 மார்ச் (ஹி.ச.)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டது.
இத்திருத்தலம் மட்டுமே கடற்கரையில் அமைந்த ஒரே முருகன் திருக்கோவிலாகும்.
இது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது.
சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது.
முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
இவ்வாறான பெருமைகள் கொண்ட திருச்செந்தூர் முருகன் கோவிலில் தற்போது மாசி திருவிழா நடைபெற்று வருகிறது.
இன்று காலை மாசி திருவிழாவின் ஒரு பகுதியாக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிலையில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை (மார்ச் 03) அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிரகணம் முடிந்து இரவு 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், தீபாரதனை முடிந்து தெப்ப மண்டகப்படிக்கு புறப்பாடு நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b