திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்
திருப்பூர், 02 மார்ச் (ஹி.ச) கொங்கு மண்டலத்தில் ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் சிறப்புப்பெற்று விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசி த
Masi festival chariot parade


திருப்பூர், 02 மார்ச் (ஹி.ச)

கொங்கு மண்டலத்தில் ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் சிறப்புப்பெற்று விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் மாசி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கொடியேற்றுத்துடன் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள், திருவீதி உலா ஆகியவை நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக இன்று அதிகாலை விநாயகர், சண்முகநாதர், திருமுருகநாதர் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில், திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடைபெற்றது.

முதலில் திருமுருகநாத சுவாமி (சோமாஸ் கந்தர்) தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சண்முகநாதர் திருத்தேர் (வள்ளி தெய்வானை உடனமர் சண்முகநாதர்) வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

பின்னர் அம்பாள் முயங்குபூண் முலைவல்லியம்மை தேரோட்டம் நடைபெற்றது. ஆதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நாளை (மார்ச் 3-ஆம் தேதி) சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படவுள்ளது.

4-ஆம் தேதி தெப்பத்தேர் உற்சவம் நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும் நடைபெறவுள்ளது.

6ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 7-ஆம் தேதி மஞ்சள் நீர் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Hindusthan Samachar / vidya.b