Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மார்ச் (ஹி.ச)
இறைச்சி கடைகளில் ஆடு, மாடுகள் வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விதிகளை மீறி, இறைச்சி கடைகளிலேயே விலங்குகள் வெட்டப்படுவதாகக் கூறி, விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இறைச்சி கழிவுகள் குப்பை தொட்டிகளில் போடப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்டு எந்த கடையில் ஆடுகள் வெட்டப்படுகின்றன எனக் கூறாமல் பொத்தாம் பொதுவாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, மற்றும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ