Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 02 மார்ச் (ஹி.ச)
இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவிகளுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இன்று ஆரம்பமாகும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் அன்பு மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.
உங்கள் பள்ளிப் பயணத்தின் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த தருணம், உங்கள் உழைப்பும் முயற்சியும் வெளிப்படும் நேரமாகும். தன்னம்பிக்கையுடன், மனஅமைதியுடன் தேர்வுகளை எதிர்கொண்டு, உங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்துங்கள்.
உங்கள் கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைத்து, உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று, உங்கள் எதிர்காலம் ஒளிமயமாகவும், வெற்றிகளால் நிரம்பியதாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ